Categories
ஈரோடு மாநில செய்திகள்

மாவட்ட அளவில் கபடி போட்டி… கொடிவேரி டிரீம் ஸ்டார் அணி சாம்பியன் பட்டம்…பரிசு வழங்கி, பாராட்டிய அமைச்சர்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள்.

இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாவட்ட கால்பந்து கழக தலைவர் பாலசுப்பிரமணி, தேசிய கபடி வீரரும், ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியுமான சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்த கொடிவேரி டிரீம் ஸ்டார் அணிக்கு ரூ 5555 மற்றும் பரிசு கோப்பையும், இரண்டாவது இடத்தை பிடித்த கோபி சாரதா கல்லூரி அணிக்கு ரூ 3,333 மற்றும் பரிசு கோப்பையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரம்மதேசம் சக்தி பிரதர்ஸ் அணிக்கு ரூ 1,111 மற்றும் பரிசுக் கோப்பையையும், 4-வது இடத்தை பிடித்த கருங்கல்பாளையம் சுரேந்தர் மெமோரியல் அணிக்கு ரூ 1,111 மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.

இதேபோன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி இரவு வரை நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிக்கு ரூ 11,111 மற்றும் பரிசு கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ 7,777 மற்றும் பரிசு கோப்பையும், மூன்றாவது இடத்தை பிடித்த அணிக்கு ரூ 4,444 மற்றும் பரிசு கோப்பையும், நான்காவது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ 4,444 மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு முத்துசாமி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி உள்ளார்.

Categories

Tech |