Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன், அனைத்து விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் லூயிராஜ், செயலாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்  இடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 2-வது இடத்தை அழகப்பா கலைக்கல்லூரியும் பெற்றனர். இதனையடுத்து நடைபெற்ற 2-வது பிரிவில் முதலிடத்தை மன்னர் மேல்நிலை பள்ளியும், 2-வது இடத்தை  அரசு மேல்நிலைப் பள்ளியும் பெற்றது. மேலும் பெண்களுக்கான  போட்டியில் முதல் இடத்தை அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 2-வது இடத்தை அரசு பள்ளியும் பெற்றுள்ளது. அதன்பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிகாரிகள் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |