நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் கோகோ போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்நிலையில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், குமாரபாளையம் எஸ்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இறுதி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர்.
இந்த போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.