Categories
தேசிய செய்திகள்

மாவட்டம் வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. இவற்றிற்கெல்லாம் அனுமதி…. மாநில அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தினசரி கேரளா மாநிலம் முழுவதும் 45,000க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டு வருவதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று பரவல் மற்றும் மருத்துவமனை அனுமதி விகிதம் அடிப்படையில் மாவட்டங்களை ஏ, பி மற்றும் சி என 3 வகையாக பிரித்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஏ பிரிவின் கீழ்வரும் மாவட்டங்களில் அனைத்து சமூக, கலாச்சார, மத, அரசியல், பொது நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 நபர்கள் வரை பங்கேற்கலாம். அதேபோன்று பி மற்றும் சி வகை மாவட்டங்களில் இது போன்ற கூட்டங்கள் எதுவும் நடத்த அனுமதிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதிகளில் மத வழிபாடுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும். அதேபோன்று திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு அதிகபட்சம் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் சி வகை மாவட்டங்களில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் சி பிரிவிலுள்ள திருவனந்தபுரத்தில், பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து வகுப்புகளும், 10 மற்றும் 12 வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்களுக்கும், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கும் ஆன்லைனில் மட்டுமே கற்பிக்க நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். எனினும் குடியிருப்புக் கல்வி நிறுவனங்கள் பயோ-பபிள் மாதிரியில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |