மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 43 நபர்களை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களாக தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாராய விற்பனை, மது விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 43 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,465 லிட்டர் புதுச்சேரி சாராயம், 12 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சாராயக்கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லையில் அமைந்துள்ள 4 சோதனை சாவடி மற்றும் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 6 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.