சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை செயலாளர் ஆணைக்கு ஏற்ப சென்னையின் மண்டலம் 1 முதல் 15 வரை அந்தந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றை அகற்றி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராத தொகையை அல்லது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் விபரத்தை அறிக்கையாக மண்டல வருவாய் அலுவலர்கள் இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.