Categories
உலக செய்திகள்

மாலியில் தொடர் ராணுவ புரட்சி… பதவியை ராஜினாமா செய்த அதிபர்…!!!

மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்துள்ள நிலையில், அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே செல்கின்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிபர் இப்ராகிம் பவுபக்கர் மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் இருக்கின்ற ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் இராணுவ நிர்வாகத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதனால் மாலியில் பதற்றமான சூழல் நிலவி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மாலி அதிபர் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுபற்றி அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, ” தனது தலைமையிலான ஆட்சியையும், பாராளுமன்றத்தையும் கலக்கிறேன். நான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தம் சிந்தக்கூடாது. அதை நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஊதிய பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல், முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இராணுவ வீரர்கள் இடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |