Categories
மாநில செய்திகள்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் !!..

இந்தியாவிற்குள்  சட்டவிரோதமாக  நுழைய  முயன்ற  முன்னாள்  துணை அதிபர் அவரது  சொந்த நாட்டிற்கு  திருப்பி அனுப்பப்பட்டார் .

மாலத்தீவிற்கு  கருங்கல்  இறக்கிவிட்டு தூத்துக்குடி  பழைய  துறைமுகத்திற்கு  திரும்பிய  விர்கோ  என்ற இழுவை  கப்பலில் மாலத்தீவு  முன்னாள்  துணை  அதிபர்  அகமது  அதீப்  சட்டவிரோதமாக  நுழைந்தார்  . இந்த  இழுவை  கப்பல்  நடுக்கடலில்  வந்தபோது  நேற்று  முன்தினம்  அதிகாலை  தூத்துக்குடி  கடலோர  காவல்  படையினர்  மறித்து  சோதனை       செய்தனர் . அதில்  மாலத்தீவின்  முன்னாள்  துணை  அதிபர்  அகமது  அதீப்  அப்துல்கபூர்     இருப்பது  தெரியவந்தது .

அவரை  கடலோர  காவல்  படையினர்  தூத்துக்குடி  பழைய  துறைமுகத்திற்கு  அழைத்து  வந்து  கப்பலில்  வைத்து  விசாரணை  நடத்தினர் .அகமத்  மாலத்தீவில்  இருந்து  எப்படி  தப்பினார்  என்றும் இந்தியாவில்  யாருடன்  தொடர்பு  வைத்துள்ளார்  என்றும்  விசாரணை  நடத்தப்பட்டது . இதனிடையே  மாலத்தீவு  அரசிடம்  இருந்து  டெல்லி  வெளியுறவு  துறைக்கு அகமது  அதீப்பை  தங்கள்  நாட்டிற்கு  அனுப்பி  வைக்கு படி  கடிதம்  வந்துள்ளதாக  கூறப்படுகிறது .

இந்தநிலையில்  தூத்துக்குடி  பழைய  துறைமுகத்தில்  இருந்து  நீண்ட விசாரணைக்கு  பின்  அகமது அதீப்     மாலத்தீவிற்கு  திருப்பி அனுப்பப்பட்டார் .  சர்வதேச  கடற்பகுதியில்  மாலத்தீவு  கடற்படையினரிடம்   ஒப்படைக்கப்படுவதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது  .

Categories

Tech |