Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புக்கு வர வேண்டாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை என்று கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நோய் தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. கல்லூரி நுழைவு வாயில்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |