Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி மகனை தூக்கி கொண்டு 1 1/2 கி.மீ நடந்த தந்தை…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மகனை கையில் தூக்கிக்கொண்டு தந்தை 1 1/2 கி.மீ தூரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மன வளர்ச்சியற்ற மாற்றுத்திறனாளியான ஹரிபிரசாத்(16) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஓசூரில் பேருந்தில் ஏறியுள்ளார். கலெக்டர் அலுவலகம் அருகே சென்றபோது பேருந்து மேம்பாலத்தின் மேல்தான் செல்லும். எனவே இங்கே இறங்கி நடந்து செல்லுங்கள் என கண்டக்டர் கூறியுள்ளார். தனது மாற்றுத்திறனாளி மகளுடன் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனாலும் மூன்று பேரையும் மேம்பாலம் தொடங்கும் இடத்திலேயே இறக்கி விட்டுள்ளனர். இதனால் சுமார் 1 1/2 கிலோ மீட்டர் நடந்து கோபாலகிருஷ்ணன் தனது மகனை தூக்கியவாறு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நாங்கள் ஓசூரில் வசித்து வருகிறோம். எனது மகனுக்கு மூளை வளர்ச்சி இல்லாததோடு, வலிப்பு நோயையும் இருக்கிறது. எனவே நிதி உதவி கேட்டு மனு கொடுக்க வந்தோம். ஆனால் மேம்பாலம் தொடங்கும் இடத்திலேயே எங்களை இறக்கி விட்டதால் 1 1/2 கிலோ மீட்டர் நடந்து கலெக்டர் அலுவலகம் வந்தோம் என அவர் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |