Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை மகிழ வைத்து… இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்… குவியும் பாராட்டுக்கள்…!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் அனைவரும் பரிசு வழங்கிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

புதுச்சேரி மாவட்டம் கோபாலன் கடை என்ற பகுதியைச் சேர்ந்த கீர்த்திக்கா என்ற பெண் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஆதரவற்று இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் வாயிலாக கீர்த்திகா சார்பாக வெளியிடப்பட்டு உதவி கோரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் கீர்த்திகாவிடம் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பிறகு அவர் திருமணத்திற்காக உதவி கேட்ட தகவல் உண்மை என்று தெரிய வந்த பின்பு ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து காவல் துறையினரும் சேர்ந்து அவருக்கு உதவியுள்ளனர். அதாவது 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சீர்வரிசை பொருட்களை அப்பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் அனைவரும் சேர்ந்து பரிசாக அளித்துள்ளனர். தற்போது காவல்துறையினர் செய்த இந்த உதவிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |