தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
என்று பேசினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் சிம்மசந்திரன், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு அரசு வேலை முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும் அறிவித்துவிட்டு போய்விடலா.ம் அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான் திமுக ஆட்சி. அந்த நிலையில் இருந்து நிச்சயம் அதை நிறைவேற்றிக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.