Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்…. உடனே விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயது முதல் 60 வயது உட்பட்ட காது கேளாத, வாய் பேசாத, மன வளர்ச்சி குன்றிய மற்றும் 70 சதவீதத்திற்கும் மேல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களின் தாய்மார்கள் தையல் மெஷின் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தையல் மெஷின் வழங்குவதற்கு அடுத்த மாதம் 4-ம் தேதி பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஜூன் 27 ஆகும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

Categories

Tech |