தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் பணியை மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு அரசியல் விமர்சகர்கள், மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.