பிரபலம் சின்னத்திரை சீரியல் நடிகர் முன்னா சன் டிவி தொடரில் இருந்து விலகி விஜய் டிவி தொடரில் தன்னுடைய பயணத்தை தொடர போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெள்ளித்திரை பிரபலங்களை போலவே சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும். சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் மக்களிடையே அதிக வரவேற்பு கொண்டுள்ள தொலைக்காட்சிகள் ஆகும். இந்த இரண்டு தொலைக்காட்சி சீரியல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சின்னத்திரை சீரியல் பிரபலம் ஒருவர் சன்டிவி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். அவர் தற்போது விஜய் டிவியின் சீரியலில் நடிக்கவுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகரான முன்னா சன் டிவியில் சந்திரலேகா சீரியல் தொடரில் நடித்து வருகிறார். அவர் தற்போது மார்ச் 22 முதல் தொடங்க உள்ள ராஜபார்வை என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து முன்னா கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மாற்றம் ஒன்றே மாறாதது” எனவே மாற்றம் சிறந்த முறையில் இருந்தால் தான் நல்ல முன்னேற்றத்தை தரும் என்று தான் நல்லதொரு மாற்றத்தை தேடி வேறொரு பாதையில் தனது கலைப்பயணம் விஜய் டிவி ராஜபார்வையுடன் தொடர உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சந்திரலேகா குடும்பத்திற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தற்போது முன்னா சந்திரலேகா தொடரில் இருந்து விலகுவதால் ஜெய்கணேஷ் மீண்டும் சன் டிவியின் சந்திரலேகா குடும்பத்துடன் இணைந்துள்ளார்.