Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நூறாவது நாளாக இன்றும்…. வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று(பிப்..12) 100-வது நாளாக 1 லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு நவம்பர்-3ல் இரவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. அன்று லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 5-ம், டீசல் விலை ரூபாய் 10-ம் சரிந்தது. அன்று முதல் இன்று (பிப்ரவரி 12) வரை 100 நாட்கள் ஆகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |