Categories
மாநில செய்திகள்

மாற்றங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!!

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி வேப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில்  தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின்   ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டமானது  ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். அதன்பின்னர் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |