உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மணத்தக்காளி இலையை சாப்பிட்டு வந்தால் மார்புவலி மற்றும் சளியை கட்டுப்படுத்த முடியும்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவில் மிகவும் இன்றியமையாதது. அதனை மிக கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு நலம் தரும் உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினந்தோறும் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலம் கிடைக்கும். அதன்படி உடல் ஆரோக்கியத்திற்கு மணத்தக்காளி மிகவும் முக்கியம்.
இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர, சிறுநீர்த்தடை மற்றும் கீழ்வாயு போன்றவை உடனே கட்டுப்படும். அதோடு இலையை காயவைத்து வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். மார்பு வலியையும் சளியையும் கட்டுப்படுத்த முடியும்.