தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
https://www.instagram.com/reel/Ciu5iUJNK1e/?utm_source=ig_web_button_share_sheet
அதன்பிறகு வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகள் உற்சாகப்படுத்தி மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் நடிகை மீனா மார்டன் உடையில் லிப்டுக்குள் இருந்து வெளியே வரும் ஒரு அசத்தலான வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை மீனா வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.