ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண் பெண்கள் பெருமை வாய்ந்தவர்கள். பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
மகளிர் தினம் உருவான கதை..?
1789 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சுதந்தரம் சமத்துவம் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ச் புரட்சியின்போது பாரிஸில் பெண்கள் போர்க்கொடி தூக்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமுதாயத்தில் உரிமை பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை போன்றவற்றிற்காக போராட்டம் நடத்தினர். கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் நடுத்தெருவில் நின்று போராட்டம் நடத்தினர்.
புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் அவர்களை தன் இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் என்றும் அறிவித்தார். ஆயிரக்கணக்கான பெண் கூட்டம் அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டது. மிகவும் பெருமையாக இருந்தது. அரண்மனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய போதும் அரசின் மேல்காவலரை திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனது. கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன் என்று கூறியது. ஆனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதை அடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட, அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டன.ர் தொடர்ந்து ஜெர்மனி ஆஸ்திரியா டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இத்தாலியிலும் பெண்கள் தங்களது கோரிக்கையை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்படி பல நாடுகளிலும் பெண்கள் தங்களது உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8ம் தேதி அனைத்துலக பெண்கள் தினம் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தில் அவர்கள் வேலை பார்த்து வந்தனர் 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி குரல் எழுப்பினர்.
இதையடுத்து அனைத்து பெண்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கான உரிமை வழங்கப்பட்டது. பெண்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளான மார்ச் 8ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.