புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
மேலும் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 26ஆம் தேதி அன்று பணி நாள் என்றும், வழக்கமாக சனிக்கிழமை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி பணி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.