Categories
சினிமா தமிழ் சினிமா

மார்ச் 5… ரிலீசாக இருந்த “நெஞ்சம் மறப்பதில்லை”… சென்னை உயர்நீதிமன்றம் தடை.!!.

செல்வராகவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் தற்போது வெளியாக இருந்தது. இதை அடுத்து நீதிமன்றம் அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா போன்ற பல நடிகர்கள் நடிப்பில் உருவான படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் புதுக்கோட்டையை அடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படவேலைகள் முடிந்ததும் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்த படத்தை வரும் 5-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர் . இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மார்ச் 5ஆம் தேதி திரைப்படம் வெளியாவதை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிட் தாக்கல் செய்த இந்த வழக்கின் மூலம் இந்த உத்தரவு வெளியாகி உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி வரை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |