Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மார்ச் 1 எல்லாமே வெடித்து சிதறும்”…. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் கடிதத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ஆம்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதி, அதை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இக்கடிதம் குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இத்தகவலை கேட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடிதம் எழுதிய அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |