லத்தி திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்குரிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அவற்றில் பாடலின் தொடர்ச்சியாக சண்டை வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்குப் பலத்தகாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் விஷால் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.