பொதுவாக, அவல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் சிவப்பு அவலில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் சிவப்பு அவலை வைத்து, ஒரு பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சிவப்பு அவல் – 2 கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
முந்திரி – 15
பால் – 4 கப்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம் – 6
செய்முறை:
முதலில் 6 பாதாமையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு 15 முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.
அதன்பின் 2 கப் சிவப்பு அவலுடன், சிறுது தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி, 5 நிமிடம் அப்படியே வைதிருக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 4 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் 2 கப் அவல், 3/4 கப் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறுதியில் அவல் வெந்ததும், இறக்கி பரிமாறும் நிலையில் முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும். இப்போது சூப்பரான பாயாசம் ரெடி.