Categories
தேசிய செய்திகள்

மாயமான கள்ளச்சாராய பாட்டில்….” எலிகள் தான் தூக்கிட்டு போயிருச்சு”… காவல்துறை அளித்த பதிலால் அதிர்ச்சி..!!

காவல்துறையினர் பறிமுதல் செய்த கள்ளச் சாராய பாட்டில்கள் அனைத்தும் மாயமானதற்கு எலிகளே காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் இடா மாவட்டத்தில் 1,450 -கும் மேற்பட்ட கள்ளச்சாராய அட்டைப் பெட்டிகள் கோட் வாலி தெகாட் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். அதன்பின் பறிமுதல் செய்த அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த காவல் துறையினரிடம் விசாரித்தபோது இவை அனைத்திற்கும் எலிகள்  தான் காரணமென போலீசார் தெரிவித்துள்ளார்.

அதன்பின் 239 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் எலிகளால் சேதப்படுத்த பட்டுள்ளதாக காவல்துறையின் நிலைய நாட்குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது. பின்பு 1,450 அட்டைப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமானதற்கு   எலிகள் மீது பழியை போட்டு இருக்கும் கோட் வாலி  தெகாட் காவல்துறையினரின் செயல் உயர் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோட்வாலி  தெகாட் காவல்துறை நிலைய மேற்பார்வையாளர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் கிளார்க் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்கினை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டது.

Categories

Tech |