Categories
உலக செய்திகள்

மாயமான இளம்தாய் மற்றும் குழந்தை.. 50 வயது நபர் செய்த காரியம்.. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்..!!

பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு நபரின் வீட்டில் சடலாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் Gloucestershire என்ற பகுதியில் வசிக்கும் 25வயது பெண் benylyn burke மற்றும் இருவரின் 2 வயது குழந்தை  jelica இருவரும் மார்ச் 1 ஆம் தேதி அன்று மாயமானதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. benylyn பிலிப்பைன்ஸிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டனிற்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் benylyn மற்றும் அவரின் 2 குழந்தைகளையும் கடந்த மாதம் 17ஆம் தேதிக்கு பிறகு யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நாடு முழுவதும் இவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது ஸ்காட்லாந்தில் Dundee என்ற இடத்தில் வசிக்கும் Andrew Innes என்ற நபரின் குடியிருப்பில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாயமான benylynனின் இன்னொரு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறது.  தற்போது கைது செய்யப்பட்ட Andrewவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சமபவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |