குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(11), கௌசிகா(9) என்ற மகள்களும், ஹரிஹரன்(7) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
இதனால் முருகேசனும், உறவினர்களும் நந்தினி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மயமான தாய் மற்றும் குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.