ஐதராபாத்தில் வயதான மாமியாரை அவரின் மருமகள் நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் மாமியாரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று, அடித்து உதைத்து அவரின் ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மல்லே பள்ளி என்ற இடத்தில் கடந்த எட்டாம் தேதி நடந்துள்ளது. அந்த காட்சி சிசிடிவி பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், “மாமியார் மருமகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக சண்டை இருந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாமியார் மற்றும் மருமகள் இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். கீழ் வீட்டில் மாமியார் குடியிருக்கிறார்.மேல் வீட்டில் வசித்து வரும் தனது மருமகளின் இல்லத்திற்கு செல்லும் தண்ணீரை மாமியார் நிறுத்தியுள்ளார். அவர்களின் சண்டைக்கு இதுதான் காரணம். மருமகள் உஸ்மா பே கணவர் உபைத் அலி கான் சவுதி அரேபியாவில் இருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது.சவுதி அரேபியாவில் தனது கணவருடன் பேசுவதற்கு மற்றும் அவருடன் செல்வதற்கு தனது மாமியார் மறுப்பு கூறியதாக மருமகள் கூறியுள்ளார். சிசிடிவியில் பதிவாகியுள்ள அந்த வீடியோவில், 55 வயது மதிக்கத்தக்க மாமியாரை மருமகள் தொடர்ந்து அடிக்கிறார். முகத்தில் அடைந்துள்ளார். அதுமட்டுமன்றி மருமகளின் தாயும் அவரை பலமாக அடித்துள்ளார். இருவரும் ஒன்றாக இணைந்து பிறகு தாக்கியுள்ளனர்”என்று போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.