Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

13 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு குனியமுத்தூர் பகுதியில் முபாரக் அலி தனது மனைவியான பாத்திமா சப்னா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சப்னாவின் தாயார் இறந்து முதலாமாண்டு நினைவு நாள் அவரது தந்தை வீட்டில் வைத்து நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முபாரக் அலி தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய முபாரக் அலி தனது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள், கைக்கடிகாரம் மற்றும் 3 லட்சத்து 22 ஆயிரம்  ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முபாரக் அலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |