Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில்…. “ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை”…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு..!!

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்..

Categories

Tech |