Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாப்பிள்ளைக்கு வயசு 35… “எனக்கு பிடிக்கல”… கட்டாயப்படுத்திய பெற்றோர்… அறையில் கேட்ட அலறல் சத்தம்… பின் நடந்த சோகம்..!!

35 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால்  இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் புதூர்மேடு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கல்பனா எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். கல்பனாவிற்கு அவரது குடும்பத்தில் சுமார் ஒரு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கல்பனாவை ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு வங்கியில் பணிபுரியும் 35 வயதான அவர் பெண்ணை தனக்கு பிடித்து விட்டதாகவும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் கல்பனா 35 வயதாகும் மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். அவரது பேச்சை ஏற்காத பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப் படுத்தி உள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கல்பனா நேற்று வழக்கம்போல் தூங்க  சென்றுள்ளார். அதன்பிறகு சில மணி நேரத்தில் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு கல்பனா பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டிருப்பதை கண்டு பெற்றோர் கதறி கூச்சலிட்டனர்.

அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று கல்பனாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக அளவு இரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |