Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு போட்டி…. சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி ஆர்.சி உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் சோபியா, ஆரோக்கியநாதன், ஆருயிராஜ், அல்போன்ஸ் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |