Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்… வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை… பாராட்டிய பேராசிரியர்கள்…!!!

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டும் போட்டி ஆகியவற்றில் மாணவன் எஸ்.பி இம்ரான் முதலிடத்தையும், மன்சூர் ஷாபாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தையும், ஏ.எஸ் முபாரக் அலி குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும், பி.பிரவீன்குமார் வட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலாளர் எல்.எம்.முனீர்அகமது, கல்லூரியின் முதல்வர் டாக்டர். முகமது இலியாஸ், உடற்கல்வி இயக்குனர் முகமது இஸ்மாயில் கான் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை  பாராட்டினார்கள்.

Categories

Tech |