Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான…. சிலம்பம் போட்டிக்கு…. அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு….!!!!

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் ரகுமான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் சீனியர் பிரிவில் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் பாசில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களான சங்கர், முருகேசன், பழனிதுரை, வெங்கடாசலம் ஆகியோரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமாரும் பள்ளியினுடைய தலைமை ஆசிரியரான ஆறுமுகமும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |