Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அனைத்து அரசு உதவி பெறாத பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களின் ஊழியர்களுக்கான மானியத்தை அரசு அதிகரித்துள்ளது. அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதி 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்தது. எனவே தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரெகுலர் மற்றும் காண்ட்ராக்ட் ஜூனியர் ஆசிரியர்களின் சம்பளம் 50% உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜூனியர் ஆசிரியர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் ரெகுலர் ஆசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 33,038 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட சம்பளம் ஒப்பந்த ஜூனியர் ஆசிரியர்களுக்கு ரூ.11,000 மற்றும் ரெகுலர் ஜூனியர் ஆசிரியர்களுக்கு ரூ.13800 மாத ஊதியம் வழங்கப்படும். இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.168 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |