இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருட அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. அதன்படி ஆந்திர அரசு ஊழியர்களுக்கு 5.24% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி இந்த மாதம் முதல் 3 தவணைகளில் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய சம்பள முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மறுவரையறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறினார். இந்த கோரிக்கை குறித்து அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் ஊதிய உத்தரவு குறித்து ஆய்வு செய்ய ஊதிய திருத்த ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்தத்தின்படி அடிப்படை ஊதியம் 23% உயர்த்தி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.