Categories
மாநில செய்திகள்

“மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா” உங்க சீனியர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்… முதல்வர் ஸ்டாலின்…..!!!!

சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையின் சாராம்சங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். “அறிவு சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநில கல்லூரி விளங்குகிறது. சமூகநீதி தத்துவமே பிள்ளைகளின் கல்வி, இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டதுதான். ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாதீர்கள்.

சுமார் 56 விழுக்காடு பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருக்கின்றனர். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை ஆகும். இதனிடையில் கல்வியை கடல் என சொல்லுவார்கள் . அக்கடலுக்கு எதிரில் இருக்ககூடிய கல்லூரிதான் மாநிலக்கல்லூரி. கடந்த 1840 ஆம் வருடம் துவங்கப்பட்ட இந்த கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்பே உருவாகியது. நான் பயின்ற மாநில கல்லூரி நிகழ்சியில் கலந்துகொள்வதில் இருமாப்படைகிறேன். உங்களுடைய சீனியர் எனும் அடிப்படையில் மாணவர்களை வாழ்த்துகிறேன்.

இந்த கல்லூரியில் அரசியல், அறிவியல் பாடபிரிவு படித்த நிலையில், படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திகொள்ள இயலவில்லை. மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருந்தபோது போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன். இதற்கிடையில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளான சர்.பிடி.தியாகராயர், டி.எம்.நாயர் போன்றோர் இந்த கல்லூரியில் படித்தவர்கள். 2000 நபர்கள் அமரும் அடிப்படையில் மாபெரும் அரங்கம் அமைக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும். அந்த அரங்கத்துக்கு தயாநிதி மற்றும் உதயநிதி நிதியளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதியமைத்து தரப்படும். சென்ற ஓராண்டில் பள்ளிக்கல்வித்துறை துள்ளி எழுந்துள்ளது” என்று பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |