75 நாட்கள் “மாநாடு” வெற்றி நடை போட்டாலும் தற்போது வரை வினியோகஸ்தாரர்களின் கணக்கை ஒப்படைக்க முடியவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
மாநாடு படத்தில் சிம்பு கல்யாணி ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் ரெடியாகியுள்ளது. இதனையடுத்து சிம்பு கம்பேக் கொடுத்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி வேதனை தெரிவித்துள்ளார். அதாவது மாநாடு படம் வெளியாகி 75 நாட்கள் வெற்றிநடை போட்டாலும் தற்போதுவரை வினியோகஸ்தர்களின் கணக்கை ஒப்படைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனால்தான் மாநாடு படத்திற்கான வசூல் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படமால் உள்ளது.