Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாநகரப் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு…. “நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர்”….!!!!

கோவை மாநகர பகுதியில் இருக்கின்ற கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆணையாளர் நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையராக மு.பிரதாப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்  நேற்று முன்தினம் திடீரென மாநகரப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள நடைபாதையில் இருக்கின்ற ஆதரவற்ற மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அந்த மூதாட்டியிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி தனக்கு விருப்பமில்லை என்றும், தனது மகன் இரவில் அங்கு வந்து கூட்டி செல்வதாகவும் கூறினார்.

இதனை அடுத்து அங்கு சென்ற ஆணையாளர் அங்குள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது டவுன்ஹால் ராஜவீதி பகுதியில் இருக்கின்ற கடைகளில் ஆய்வு செய்த ஆணையாளர் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று கேட்டார். அதோடு மட்டுமல்லாது கடைகளில் இருந்த விற்பனையாளரிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தான் முதலமைச்சர் மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

எனவே பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட பையை பயன்படுத்துவதே தவிர்த்துவிட்டு மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்களிடம் கூறினார். இதனையடுத்து அங்கிருந்த மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் ஒழுங்காக பணிக்கு வருகின்றார்களா? சரியாக குப்பைகளை சுத்தம் செய்கிறார்களா? என்று கேட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |