Categories
மாநில செய்திகள்

மாத சம்பளதாரர்களுக்கு…. நிதி வட்டி விகிதம் குறைப்பு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

2021 22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது 4,  10 ஆண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2022ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இபிஎஃப் திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளது. இதற்காக தொழிலாளர். அமைச்சகம் தனது ஒப்புதலுக்கான முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது அரசாங்கத்தின் வட்டி விகிதத்தை உறுதிப்படுத்திய பிறகு  இபிஎஃப்ஓ நிதியாண்டிற்கான நிலையான வட்டி விகிதத்தை இபிஎஃப் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கும். அதன்படி 2020- 21 ஆம் ஆண்டுக்கான வைப்பு நிதிக்கான 8.5% விகிதம் மார்ச் 2021 இல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |