மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி இதில் நாம் பார்க்கலாம்.
மத்திய அரசின் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய ஓய்வூதியத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அது பற்றியும் அதன் இன் பலன்கள் பற்றியும் நாம் தற்போது பார்ப்போம். அரசு ஊழியர்களின் பணி காலம் நிறையும் போது அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இந்த திட்டத்தில் சேர்வதால் முதுமை காலத்தில் மாதம் தோறும் 40 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெறலாம். இதில் வருடத்திற்கு 10 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்ற நிலையில் 18 முதல் 65 வயது நிரம்பியவர் வரை இதில் இணையலாம். இத்திட்டத்தில் தனிநபரின் ஒரு கணக்கு மட்டுமே இணைய முடியும் என்கின்ற நிலையில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.