Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 முதலீடு செய்தால் போதும்…. ரூ.36,000 பென்ஷன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 18 வயதில் இணைந்தால் மாதம் தோறும் 55 ரூபாய் முதலீடு செய்தால் மட்டும் போதும். மாதம் தோறும் 3000 ரூபாய் என வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அதுவே 40 வயது இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்தால் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு பிறகு பென்ஷன் உங்களுக்கு வரத் தொடங்கும்.இந்த திட்டத்தில் நீங்கள் இணைய விரும்பினால் இணைய பொது சேவை மையத்திற்கு சென்று உங்கள் கணக்கை தொடங்கலாம்.

Categories

Tech |