Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.5 ஆயிரம் வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் சிறந்த சேமிப்பு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்திய அஞ்சல் சேவை சார்பாக தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆபத்துக்கள் நிறைந்த முதலீட்டு திட்டங்களில் சேருவதை ஒப்பிடுகையில் பாதுகாப்பு கொண்ட அரசு திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது என மக்கள் விரும்புகின்றனர். அதனால் அஞ்சல் நிலையத்தில் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் பலன் பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் நீங்கள் தனிநபர் கணக்கு அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து கொள்ள முடியும். தனிநபர் அக்கௌன்ட் கீழ் நீங்கள் 4.5 லட்சம் ரூபாய் வரையிலும்ஜாயின்ட் ஆக்கவுண்ட் மூலமாக 9 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.

இந்த முதலீட்டில் ஒவ்வொரு வருடமும் 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படும். உங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.59,400 வருமானம் கிடைக்கும். இந்தத் தொகையை 12 ஆக வகுத்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் ரூ.4,950 ஆகும். இந்த வட்டியை ஜாயின்ட் ஆக்கவுண்ட் இல் நீங்கள் சாத்தியம் செய்யலாம். தனிநபர் கணக்கை பொறுத்த வரையில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,475 என்ற வகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக உங்கள் பெயரில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். அத்துடன் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கூட இந்த அக்கவுண்ட் திறக்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு தான் பண பலன்களை பெற முடியும்.

Categories

Tech |