Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.10000 முதலீடு செய்தால்…. 28 ஆண்டுகளுக்கு பின்…. ரூ.1 கோடி வருமானம் கிடைக்கும்…!!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு நல்ல ஒரு வருமானத்தையும் வருமானவரி சலுகைகளையும் கொடுக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் வருமான வரி சலுகைகள் மட்டும் தான் கிடைக்கும் என்று மன நிலையில் உள்ளனர். இதில் பல்வேறு பயன்கள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இப்போது இந்த திட்டத்திற்கு 7.1சதவீதம் வட்டி கிடைக்கிறது. வருமான வரிச் சலுகைகள், வரிவிலக்கு, மூலதன பாதுகாப்பு உட்பட இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தில் மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் 100 சதவீதம் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு கிடைக்கிறது. பங்குச்சந்தை திட்டத்திற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவே நஷ்டமே இல்லாமல் வருமானம் கிடைக்கும். இதில் அவசர தேவைக்காக பாதி பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது கடனாகக் கூட வாங்கிக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 3 ஆம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை நீங்கள் கடனாக 20 சதவீதம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் வருடத்திற்கு 500 ரூபாய் முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் 7.1% என்பதால் எடுத்துக்காட்டாக 28 வருடத்திற்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் இறுதியில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்.

Categories

Tech |