மாண்டஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் வேகத்தை பொறுத்தும் இடத்தை பொறுத்தும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.
Categories
மாண்டஸ்: மின்சாரம் துண்டிக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!
