Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… பெரும் பாதிப்பை சந்தித்த கிழக்கு கடற்கரை சாலை பகுதி… வெளியான தகவல்…!!!!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில்  நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த மக்களையும் பாதுகாப்பு கருதி சமூக நலக்கூடங்களுக்கு அழைத்து  சென்றுள்ளனர். இதற்கிடையே கடற்கரையை ஒட்டி உள்ள குடியிருப்புகள் மற்றும் பங்களாக்களில் இரவு 8 மணிக்கு பின் கடல் நீர் புகுந்துள்ளது.

அதேபோல் வேகமாக அடித்த அலையின் ஆக்ரோஷத்தால் கானத்தூர், ஈஞ்சம்பாக்கம், நயினார் குப்பம், முத்தண்டி போன்ற பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள், நாட்டு படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து இந்தப் பகுதிகளில் இருந்த மரங்கள் பெரும் சேதம்  அடைந்துள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிக அளவில் விழுந்த காரணத்தினால் அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. அதன் பின் சனிக்கிழமை நண்பகலுக்கு  பின்னே மின்விநியோகம் சரிசெய்யபட்டது. சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி மாண்டஸ் புயல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |