இரு தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே தேவனேரி மீனவர் குப்பத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் துள்ளியமாக ஆய்வு செய்வர். பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
கடந்த 10 ஆம் தேதியன்று மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.