Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல் எதிரொலி”….. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்…!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி. ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆறுகளில் வெள்ள கரைப்புரண்டு ஓடுகிறது. மேலும் தெலுங்கானாவில் 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |