வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ் .எஸ் ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து புயல் தாக்கத்தால் உயிரிழந்த ஐந்து பேருக்கு தலா 4 லட்சம் இழப்பீட வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.